மின்னிதழாக வெளிவரும் ஆனந்தசந்திரிகை பத்திரிக்கையின் இவ்வருட ஆண்டுமலரில் நான் எழுதிய கட்டுரை வெளிவந்துள்ளது. குழந்தை வளர்ப்பைப் பற்றிய எங்களது அனுபவங்களைத் தொகுத்து நான் எழுதிய கட்டுரை “குணவான்களாக ஆக்கும் குழந்தைகள்” என்னும் தலைப்பில் வந்துள்ளது. முழு ஆண்டுமலர் பின்வரும் இணைப்பில் உள்ளது (74ம் பக்கத்தில் கட்டுரை உள்ளது).
இதன் இணையாசிரியரான லோகமாதேவி அவர்களும், பிற கட்டுரைகளை எழுதியிருப்பவர்களில் சுபா சுந்தரம், யோகேஸ்வரன் ராமநாதன், ஷாகுல் ஹமீது ஆகியோரும் சக ஜெயமோகன் வாசகர்கள், என் நண்பர்கள். ஷாகுல் ஹமீது இந்த மலரைப் பற்றி எழுதிய கடிதம் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் தளத்தில் வந்தது கூடுதல் இன்பம். இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி இது ஒரு வாட்ஸாப் குழுமத்தில் சாதாரண விவாதமாக தொடங்கியது. பதிலளிப்பதை ஒவ்வொரு வரியாக எழுதி அனுப்பாமல் தொகுத்து ஒரு பெரிய விரிவான பதிலாக எழுதலாமே என ஆரம்பித்து இக்கட்டுரையின் பெரும்பகுதியை எழுதினேன். அதைத் தொடர்ந்து அக்குழுமத்திலேயே ஒரு சிறிய உரையாடல் உருவானது. லோகமாதேவி அவர்கள் ஆனந்த சந்திரிகையின் ஆண்டு மலருக்கு கட்டுரை கேட்டபோது, இவ்வலைப்பூவுக்காக அந்த வாட்ஸாப் உரையாடலை ஒரு பதிவாக செப்பனிட்டுக் கொண்டிருந்தேன். அதையே ஒழுங்குபடுத்தி அவர்களுக்கு கட்டுரையாக அனுப்பிவைத்தேன். என்னைப் பற்றிய சிறிய அறிமுகத்துடன் அது வெளிவந்துள்ளது. படித்து உங்கள் கருத்துக்களை சொல்லவும்.
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில் வெளியான கடிதத்தின் இணைப்பு : https://www.jeyamohan.in/130716#.Xps7f5lS_b0