ஒரு ஊர்ல…

ஒரு ஊர்ல ரெண்டு கிளி இருந்துதாம். ரெண்டும் சாப்பிட்டுட்டே இருந்துதாம். அந்த வயசுல ஒரு நாள்ல முப்பத்தஞ்சு வயசு இருந்ததாம். அந்த கிளி வந்து, எப்ப பாரு லயனையே தேடிப்போகுமாம். வேற எதுவுமே சாப்பிடாதாம். அந்த ரெண்டு கிளியுமே சொல்லிட்டுருந்துதாம், சேர்ந்து ஒரு ரைம்ஸ் சொல்லிட்டேயிருந்துதாம். (கொஞ்ச நேரம் யோசித்து) அது என்ன ரைம்ஸ்ன்னு தெரியல. நாளைக்கு சொல்றேன் ஓகேயா? அந்த ரைம்ஸ் என்னன்னு எனக்கு தெரியல எனக்கு இன்னைக்கு. அதுமாதிரி சொல்லிட்டேயிருந்துதாம். அப்பபார்த்தா, ஒரு லயன் வந்து… லயனுக்கு ஓடவே தெரியாதுல்ல? (இது எப்ப?) சும்மா அந்த முட்டாள் லயன் என்ன பண்ணிட்டு இருந்தது தெரியுமா? (கைகளை ஆட்டி) இப்படி இப்படி இப்படின்னு நெளிச்சுட்டு இருந்துதாம். நீங்க கூட இப்படி இப்படி பண்ணுறீங்க அப்படி, அப்படிங்குறதாம். அப்புறம், கிளிக்கு என்ன.. முட்டைதானே புடிக்கும் (அப்படியா?) அந்த முட்டைய எடுத்து சாப்பிட்டுட்டேயிருந்துதாம். டீர், மான் எல்லாம் வந்து முட்டிக்கிட்டேயிருந்துதாம். இது என்ன இந்த இத முட்டவே முடியலன்னவுடனே, வீசி முட்டினுதாம். அப்பவும் முட்ட முடியலயாம். என்னடா இதுன்னு வேற மரம (மரத்தை) முட்ட போனுதாம். ஆஆஆங்,, இதுதான் முட்டமுடியுதுன்னு அப்படியே அந்த ஒரு கிளி இறந்தவுடனே இன்னொரு கிளிக்கு முட்டாள் புடிச்சுடும். அந்த… ஒரு லயன் சொன்னேன்ல, அந்த லயன என்ன பண்ணுது தெரியுமா? எப்ப பாரு காட்டுலதான் இருக்கும், ஆனா அது ஸூவுல வந்துதாம். நம்மோட ஃப்ரெண்ட் இருக்கேன்னு…. லயனோட ஃப்ரெண்டு என்ன? டைகர் தானே. டைகர் இருக்கே அப்படின்னுட்டு போனுதாம். போயி விலாய்டுட்டு (விளையாடிட்டு) வந்துதாம். போய் விலாய்டிட்டு எல்லாம் பண்ணிட்டு வந்துதாம். அப்பாடா நம்மளுக்கு இந்த ஃப்ரெண்டுதான் பெஸ்ட் ஃப்ரெண்டுன்னுட்டு ஒரு தட்டு தட்டிட்டு போயிட்டாங்களாம் ரெண்டு பேரும்… அப்புறம் லயனுக்கு ஒரு நெட் போட்டு வச்சுருந்தாங்க. அதான் அதோட வீடு. அப்படி போட்டு வச்சுருந்தாங்களா.. எல்லாம் சமயல் பண்ணி சாப்பிடும். இங்க போறதுன்னா போயிக்கும். எல்லாம் பண்ணுமா?… அந்த… ஒரு முட்டாள் புடிச்ச கிளி என்ன பண்ணும் தெரியுமா? ஒரு இறந்த கிளி என்ன பண்ணினுது தெரியுமா? அதுக்கும் முட்டாள்.. அந்த ரெண்டு கிளிக்கும் முட்டாள் புடிச்சுடுமாம். ஏன் தெரியுமா? அது முட்டை சாப்பிட்டதுன்னால முட்டாள் புடிச்சுடுமாம். லயன் வந்து டன் டான் டாஆஆன்னு டான்ஸ் ஆடினுதுல்ல? அதுனால முட்டை சாப்பிட்டு முட்டாள் புடிச்சுதாம். அப்புறம் ரெண்டு பேரும் என்ன பண்ணிட்டுருந்தாங்க தெரியுமா? லயனோட டான்ஸயே எல்லாருக்கும் ஆடி காமிச்சாங்களாம். “ஏய் இந்த டான்ஸ் ஃபுல்லா நல்லா இருக்கு” அப்படின்னவுடனே, ஒரு இலை.. அத எடுத்து பிரட்டி சப்பாத்தி மாவு மாதிரி பிசஞ்சு அது கிரீன் சப்பாத்தி பண்ணுறாங்களாம். அப்படி பிசஞ்சு, இதுல, எண்ணையில போட்டு, போண்டா மாதிரி பொறிச்சு எடுத்தாங்களாம். ஒரு கிரீன் போண்டான்னு பேர் வச்சுருந்தாங்களாம். ரெண்டு பேரும் சாப்பிட்டு, பெருஸ்ஸாகி வளந்து, ஸ்கூலுக்கெல்லாம் போயி, சமச்சு சாப்பிட்டு, எல்லாம் பண்ணினாங்களாம். அந்த நேரத்துல அந்த லயன்… அந்த ரெண்டு பேருக்கும், அந்த ரெண்டு கிளிக்கும் முட்டாள் புடிச்சதுனால, அந்த லயனுக்கும் ரொம்ப சிரிப்பா வந்துடுமாம். இந்த ரெண்டு கிளிக்கும் முட்டாள் புடிச்சுது அப்படின்னவுடனே, இப்ப நாம என்னெல்லாம் திங்கலாம் அப்படின்னவுடனே, ரெண்டு கிளியும் இறந்து போயிருக்கும் அப்படின்னவுடனே, நாம எல்லாரும் திங்கலாம் அப்படின்னவுடனே, சொல்லி போயி அந்த ஒரே ஒரு முட்டைய, ஒரு சொட்டு பிச்சு, டக்குனு எடுத்து வாயில போட்டுடுச்சாம். ஏன்னா அந்த கிளி டக்குனு பறந்து வந்துடுத்தாம். டக்குனு ஒரு சொட்டு, ஒரு சொட்டு எடுத்துகிட்டுதாம். அந்த கிளி வந்து முறச்சு பார்த்துதாம். ”ஏன் என்னோட முட்டைய எடுத்த? அதுலேர்ந்து என்னோட கோழி குஞ்செல்லாம் வரும்” அப்படின்னவுடனே “அப்படியாஆஆஆ… புரின்சுது, நீதான் இதுக்காக முட்ட வச்சுருக்க. நீ சாப்பிடுற இல்ல? நான் சாப்பிடக்கூடாதா கொஞ்சம்” அப்படின்னவுடனே, மூணு இதுக்கும் சண்ட வந்துக்கிட்டேயிருந்துதாம். கடைய்சில ஒரு கிளிக்கு வேதனை ஆயிடுச்சாம். ”என்னடா இது நம்மளுக்கு தான் இதுவா இருக்கு ஒரே.. முட்டாள் புடிச்சுதே அந்த கிளி எங்க போச்சு” அப்படின்னவுடனே, ”சரி நாளைக்கு தேடிக்குவோம்” அப்படின்னவுடனே, “நாளைக்கு நம்ம ஒரு பத்து…அந்த போண்டா.. கிரீன் போண்டா பொறிச்சிட்டு இருந்துதுல்ல ரெண்டும், அத எடுத்து சாப்பிட்டுக்குவோம், ஒண்ணே ஒண்ணு எடுத்து சாப்பிட்டுக்குவோம், நல்லா இருந்தா சாப்பிடுவோம், இல்லன்னா தூக்கி போட்டுடுவோம்” அப்படின்னு சாப்பிட்டு பார்த்துதாம். நல்லா இருக்கு அப்படின்னுட்டு நாளைக்கு பார்த்தா கெட்டு போச்சாம். தெரியவே இல்ல அந்த கிளிக்கு. முங்குதாம் பாக்கல, ஒண்ணு சாப்பிட்டு பார்த்துதாம். “என்ன இது கெட்டு போன மாதிரி தெரியுதே” அப்படின்னவுடனே, தூன்னு துப்பிட்டு, வேற போண்டா.. பொற்ற்ற்றீச்சு, நல்லா மொறூ மொறூன்னு பண்ணினுதாம். ரெண்டு கிளிக்கும்… நல்லா இப்படி நாக்க நீட்டி சாப்பிட்டுதாம். ”ஏய் சூடு” அப்படின்னுட்டு கொண்டு போய் வச்சு.. டேபிள்ல வச்சு ஃபேன்லாம் போட்டு ஸ்ஸ்ஸ்னு சுத்திட்டு வந்துதாம். கொஞ்சம் ஸ்லோ பண்ணிட்டு எடுத்து சாப்பிட்டுட்டு வந்துதாம். சரி இலை போண்டா பொறிப்போமா அப்படின்னுட்டு பொறிச்சாங்க. பொற்ற்ற்றீச்ச்சு, நல்லா எண்ணையில காஆஆய விட்டாங்களாம் அப்படியே… ரெண்டையும் அப்படியே முட்டாள் புடிச்ச கிளி மாதிரி, முட்டாள் பிடிச்ச போண்டா அப்படின்னு, அது கிரீன் போண்டாதானே அது பேரு, “முட்டாள் பிடிச்ச போண்டா”வாம் இது. அது ஏங்கரிதி (ஏற்கனவே) அப்படித்தான். ஃபேன் சுத்திக்கிட்டு அப்படியே கிர் கிர் கிர்னு சத்தம் கேக்கும். தின்னுட்டு வயிறு அடங்கிடுத்தாம் அப்படின்னுட்டு சந்தோசம். அப்படி,… அயோத்தில ராமர் வந்தார்னு எல்லாரும் சந்தோசப்பட்டு பட்டாசெல்லாம் வெடிச்சாங்கள்ல, அது மாதிரி பட்டாசெல்லாம் வெடிச்சு, தீபாவளிக்கு நல்லா இது பண்ணினாங்களாம். கொண்டாட்டம் ஆடினாங்களாம். கொன்னேரம் கரிச்சு (கொஞ்ச நேரம் கழிச்சு), ”போதும் நமக்கு பட்டாசு, ஏய் இன்னொரு தீபாவளி வந்திருக்கு” அப்படின்னு பட்டாச எடுத்து இப்படி இப்படி சுத்தி கன்(gun)லாம் வெடிச்சு, பட்டாசு ஃபுல்லா தீர்த்துட்டாங்களாம். தீர்த்துட்டு (கொஞ்சம் யோசித்துவிட்டு) என்னென்ன வாங்கினாங்க தெரியுமா? ஒரு தீப்பெட்டி.. ஏத்துறதுக்கு வாங்கிட்டு வந்தாங்க. அப்புறம் பிஜிலி, சாட்டை, அப்புறம் புஸ்வாணம், வெடி… நெறய வெடி, உனக்கு தெரியுமில்ல? பாம்பு எல்லாம் வச்சுருப்பாங்களா.. அதான் வெடி. அதெல்லாம் எடுத்து வச்சுட்டு இருந்தாங்களாம். “அப்பாடா.. ஜாலியா இருந்தது” அப்படின்னுட்டு, கொழுக்கட்டையெல்லாம் சாப்பிட்டு, கொண்டாட்டம் நல்லா – நிஜமா விடவேயில்ல. ஒரு gapகூட விடல – சாப்பிட்டு தூங்கி அப்படியே எய்ந்துருச்சு காலையில ஆயிடுச்சு. மத்தியானம் காலையில ஆகும்ல அதுமாதிரி இருந்துச்சாம். சரி தூங்கு அப்படின்னு தூங்கினாங்களாம். ஒரு – ஹரிணி வந்து அப்பாவ வந்து கத சொல்லு கத சொல்லுன்னு டிஸ்டர்ப் பண்ணுவாள்ல (சிரிப்பு) – அப்பா இப்ப கத சொல்லமாட்டேன் நாளைக்கு சொல்றேன் அப்படின்னு சொன்னாங்களாம். அந்த ஹரிணி முனங்கினாளாம். அப்பா திட்டினாங்களாம்(சிரிப்பு). அதான் கத

பின்குறிப்பு :
தினமும், தூங்குவதற்கு முன் “கதை சொல்லு கதை சொல்லு” என்று ஹரிணி என்னை கேட்பாள். ”இன்று எனக்கு அசதியாக இருக்கிறது. அதனால் நீ எனக்கு கதை சொல்” என்று நான் அவளை கேட்டதற்கு அவள் சொன்ன கதை இது. தூக்கம் வரவில்லை. மயக்கம்தான் வந்தது. Smile